மயிலாடுதுறை - திருச்சி முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் இயக்கம்
மயிலாடுதுறை - திருச்சி இடையே முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் இரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்.;
மயிலாடுதுறை - திருச்சி இடையே வண்டி எண் (16233/16234 ) முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் இரயில் சேவை இன்று 15.12.2021 முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த விரைவு வண்டி காலை 8.15 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு காலை 10.40 மணிக்கு திருச்சி சென்று சேரும். மறு மார்க்கத்தில் இந்த இரயில் மதியம் 12.50 புறப்பட்டு பகல் 3.15 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும். பாபநாசத்தில் இருந்து திருச்சி செல்ல காலை 9.05 மணிக்கும், மயிலாடுதுறை செல்வதற்கு மதியம் 2.00 மணிக்கும் வண்டி வந்து செல்லும்.
கட்டணம் :
பாபநாசம் - திருச்சி - ரூ.45/-
பாபநாசம் - மயிலாடுதுறை - ரூ.45/-
(குறைந்த பட்ச கட்டணம் ரூ. 30/-)
இந்த விரைவு வண்டி குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.