அய்யம்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-04-02 16:45 GMT
அய்யம்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் அய்யம்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சேக் அலாவுதீன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் சிவகுரு சிறப்புரை ஆற்றினார்.

ஒன்றிய செயலாளர் முரளிதரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகேசன், சின்னையன், மகேந்திரன், கிளை செயலாளர்கள் அருள், காமராஜ், உறுப்பினர்கள் மகாலிங்கம், தம்பிராஜா, நூர்தீன், ராமதாஸ், அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News