கபிஸ்தலம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: வாலிபர் கைது

கபிஸ்தலம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-01 00:00 GMT

கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கபிஸ்தலம் பாலக்கரை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருந்த ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த சீதா லட்சுமிபுரம் ஜீவா நகர் ஜானகிராமன் மகன் உமாபதி வயது 38, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நான்கு எண் கொண்ட பேப்பர், மற்றும் ரூபாய் 2000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News