தஞ்சை ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான பிரச்சாரம் நிறைவடைந்தது

தஞ்சை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், 52 பதவிக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது.

Update: 2021-10-07 12:45 GMT

திமுக சார்பில் போட்டியிடும் ராதிகா கோபிநாத்துக்கு ஆதரவாக, தஞ்சை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள 52 ஊராட்சி பதவிக்கான தேர்தல்,  9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 43 வார்டு உறுப்பினர் பதவிகளில் 27 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு மாவட்ட கவுன்சிலர், இரண்டு ஒன்றிய கவுன்சிலர், மூன்று ஊராட்சி மன்ற தலைவர், 21 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள 16-ஆவது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் ராதிகா கோபிநாத், அதிமுக சார்பில் இந்திரா சண்முகவேல் சார்பில் சியாமளா அமர்சிங் உள்ளிட்ட ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்.  இதற்கான தேர்தல்,  நாளை மறுநாள் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் இன்றுடன் ஓய்ந்தது. முன்னதாக, திமுக சார்பில் போட்டியிடும் ராதிகா கோபிநாத்துக்கு ஆதரவாக,  தஞ்சை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

Tags:    

Similar News