தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-22 00:30 GMT

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே நெடுந்தெரு மெயின் ரோட்டை சேர்ந்தவர் அம்பிகாபதி மகன் கனிவழகன் (20). கூலித்தொழிலாளி. இவர் சம்பாதிக்கும் பணத்தில் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்தனர்.

இதில் மனமுடைந்த கனிவழகன்,  சம்பவத்தன்று வி‌ஷத்தன்மை கொண்ட எலி பிஸ்கட்டை தின்றுவிட்டார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனிவழகன் பரிதாபமாக இறந்தார். அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News