குடிபோதையில் நண்பனை கொலை செய்த சம்பவம்: போலீசார் விசாரணை
பாபநாசத்தில் குடிபோதையில் நண்பருடன் ஏற்பட்ட தகராறில் மற்றொரு நண்பரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாபநாசம் மேல ரஸ்தா பகுதியை சேர்ந்த பிள்ளை மகன் மனோஜ் (எ) விக்னேஸ்வரன் (24). இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பாபநாசத்தில் உள்ள ஆண்கள் விளையாட்டு மைதான வளாகத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனோஜை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதனையடுத்து மனோஜின் அலறலை சத்தம் கேட்டு அப்பகுதியினர் மனோஜை தூக்கிக்கொண்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.