பாபநாசம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடக்க விழா

பாபநாசம் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது;

Update: 2021-12-23 16:45 GMT

பாபநாசம் வட்டார கல்வி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. பாபநாசம் வட்டார கல்வி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன், தன்னார்வலர் வின்சி, ஆசிரியர் பயிற்றுனர் அகிலா, ஒன்றிய மைய ஒருங்கிணைப்பாளர்கள் சிவராஜ், அமர்நாத், பள்ளி ஆசிரியர்கள் அமுதா, தங்க பிரகாசம், சதீஷ்குமார், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். விழாவில் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News