தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்ட கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது.;
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்ட கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழுக்கூட்டம் வட்ட தலைவர் சோமா.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு தமிழக அரசு காலமுறை சம்பளம் மற்றும் பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ஆம் தேதி அன்று சென்னை வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் இருந்து கிராம உதவியாளர்கள் அனைவரும் 2 வேன்கள் மூலம் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கிராம உதவியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.