பாபநாசம் மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு
பாபநாசம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா மையத்தை எம்எல்ஏ ஜவாஹிருல்லா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தையும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பின ஜவாஹிருல்லா பார்வையிட வந்தார்..
அப்போது மருதூதுவமனையில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் மாத்திரைகள் ஊசிகள் அனைத்தும் போதுமான அளவில் உள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது.
பாபநாசம் அரசு மருத்துவமனையில் தொற்ல் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை அல்லது கும்பகோணத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இனிவரும் நாட்களில் கொரோனோ பாதித்தவர்கள் பாபநாசத்திலே சிகிச்சை பெறும் வகையில் 32 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்தி வருவதாகவும்,
இரண்டொரு நாட்களில் இதற்கான வசதிகள் செய்து தரப்படும். மேலும் மருந்து, மாத்திரைகள், ஊசிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் தேவையான அளவில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.