பாபநாசத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்து 4 1/2 பவுன் தங்க செயின் திருட்டு

பாபநாசத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்து 4 1/2 பவுன் தங்க செயின் திருட்டு;

Update: 2022-02-25 13:00 GMT

பாபநாசம் வங்காரம் பேட்டை கீழ செங்குந்தர் தெருவில் வசித்து வருபவர்‌ சுசீலா (68). இவர் வீட்டிலிருந்து புறப்படும்போது தன் கழுத்தில் 4 1/2 பவுன் தங்கச் செயின் ஒன்றை அணிந்து கொண்டு பாபநாசம் வங்காரம்பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 4 1/2 பவுன் தங்க செயினை கூட்டத்தில் யாரோ திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுசீலா பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் திருட்டு வழக்கு பதிவு செய்து  தங்க செயினை திருடிச் சென்ற திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News