பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றம்

கீழவெண்மணி தியாகிகள் தினத்தையொட்டி பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றப்பட்டது;

Update: 2021-12-25 17:30 GMT

பாபநாசத்தில் கட்சிக்கொடியேற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்

பாபநாசம் புதிய பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 25 வெண்மணி தியாகிகள் நாளினை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன் கொடியினை ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜார்ஜ், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் இளங்கோவன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் பாலாஜி, சசிகுமார் வனத்தையன், கோபி, மகேந்திரன், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News