தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம்

பாபநாசம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.;

Update: 2022-04-15 07:09 GMT

பாபநாசம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் நீத்தார் நினைவு நாளில் மலர் வளையம் வைத்து தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. மேலும் பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய எல்லைக்கு உட்பட்ட திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் பாதுகாப்பு பணியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தீ தடுப்பு பிரச்சாரமும் நடைபெற்றது. நிலைய அலுவலர் கலைவாணன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். தீயணைப்பு படை வீரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News