தரமற்ற விதைகளை வழங்கிய கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் தரமற்ற விதைகளை வழங்கிய கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2021-07-12 11:54 GMT

அம்மாப்பேட்டையில் தரமற்ற விதைகளை வழங்கிய கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டையில் உள்ள தனியார் நெல் விதை விற்பனையாளரிடம் புத்தூர் நடுப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் விதை நெல் வாங்கி நாற்றங்காலில் குறுவை சாகுபடிக்கு விதை விதைத்துள்ளனர்.

சில தினங்கள் கழித்து நாற்றங்காளில் பல இடங்களில் நெல் சரிவர முளைக்காமல் இருந்துள்ளது. அந்த இடங்களில் விதைக்கப்பட்ட நெல் முளைப்பு தன்மையற்ற நெல்லாக இருந்து விவசாயிகளுக்கு தெரிய வந்தது.

விவசாயிகள் விதை நெல் விற்பனை செய்தவரிடம் தெரிவித்துள்ளனர். அவரும் நாற்றங்காலை பார்வையிட்டு தரமற்ற முளைப்பு திறனற்ற விதை நெல் இருப்பதை தெரிந்து கொண்டார்.  விவசாயிகளுக்கு வழங்கிய விதை நெல்லில் நாற்றுவிட்ட நாற்றங்கால் சரிவர நெல்பயிர்கள் முளைக்காமல் உள்ளதால் விவசாயிகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 முளைப்பு திறனற்ற விதை நெல்லை விற்பனை செய்த கம்பெனியின் மீது சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளுக்கு ஊரிய இழப்பிட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குநரிடம், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Tags:    

Similar News