பாபநாசம் பகுதியில் சேப்பங்கிழங்கு விலை குறைவால் விவசாயிகள் வேதனை

சேப்பங்கிழங்கை சுத்தம் செய்து மூட்டையாக ஏற்றி தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றதில் மிகவும் குறைந்தது

Update: 2022-01-14 12:30 GMT

பாபநாசம் பகுதியில் சேப்பங்கிழங்கு விலை குறைவால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சேப்பங் கிழங்கு பயிரிடப்பட்டிருந்து.

இதுகுறித்து விவசாயி பொன்னையன் கூறியதாவது :- இப்பகுதியில் சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு ஒரு ஏக்கரில் 60,000 செலவில் பயிரிடப்பட்டது. தற்போது சமீபத்தில் பெய்த தொடர் கன மழையினால் கருணைக்கிழங்கு சேதம் ஏற்பட்டது. சேப்பங்கிழங்கு போதுமான மகசூல் இல்லை இங்கு 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு சேப்பங்கிழங்கை சுத்தம் செய்து மூட்டையாக ஏற்றி தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றதில் ஒரு கிலோ 8 ரூபாய்க்கு குறைவான விலையில் விலை போகிறது. ஒரு மூட்டை 400 க்கும் குறைவாக விலை போவதால் எங்களுக்கு கட்டுபடி ஆகவில்லை. எனவே தமிழக அரசு எங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார்.

Similar News