தஞ்சை மாவட்டத்தில் 22 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்: வாக்குப் பதிவு விறுவிறுப்பு

தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Update: 2021-10-09 03:30 GMT

தஞ்சை மாவட்டத்தில் 22 உள்ளாட்சி பதிவிக்கான வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இரண்டாவது கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்கு பதிவு காலை தொடங்கியது. அதன்படி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், ஒரத்தநாடு கும்பகோணம் அருகே ஒன்றியங்களில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும் தலா ஒரு இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இது தவிர திருவையாறு ஒன்றியத்தில் வெங்கடசமுதிரம், வளப்பகுடி ஊராட்சி மன்ற தலைவர் பதிவிக்கும் , திருவோணம் ஒன்றியத்தில் அதம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெறுகிறது.

கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தஞ்சை ஒன்றியத்தில் மாத்தூர் கிழக்கு, தோட்டக்காடு ஊராட்சியிலும் ஒரத்தநாடு ஒன்றியத்தில் தென்னமநாடு ஊராட்சியிலும், கும்பகோணத்தில் கடிச்சம்பாடி, சுந்தரபெருமாள் கோவில் ஊராட்சியிலும் தேர்தல் நடைபெறுகிறது திருவிடைமருதூர் ஒன்றியத்தில் இஞ்சிகொல்லை, திருநீலக்குடி வண்டுவாஞ்சேரி , வண்ணக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில் கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சிகளும் தேர்தல் நடைபெறுகிறது.

பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் தாமரங்கோட்டை வடக்கு ஊராட்சிகளும், பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் தாமரங்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் பழைய நகரம், வாட்டத்தி கோட்டை ஊராட்சியிலும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் அழகியநாயகிபுரம், மரக்காவலசை ஊராட்சியில்னும் தேர்தல் நடைபெறுகிறது.தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News