பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லா வெற்றிப் பெற்றார்.;

Update: 2021-05-02 16:15 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் எம்.எச்.ஜவாஹிருல்லா போட்டியிட்டார். அதிமுக சார்பில் கோபிநாதன் போட்டியிட்டார். இதில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லா 86,567 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கோபிநாதன் 70,294 வாக்குகளை பெற்றார். ஜவாஹிருல்லா 16,273 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கே.சாந்தா (மநீம) 2,032, ந.கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்) 14,724, எம்.ரெங்கசாமி (அமமுக) 19,778, நோட்டா 1204

Tags:    

Similar News