அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி மின்சார வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி பாபநாசத்தில் மின்சார வாரிய பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
பாபநாசம் நகர் பிரிவு தமிழ்நாடு மின்சார வாரியம் பணியாளர்கள் அலுவலக நுழைவுவாயில் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கோட்ட செயலாளர் மணிவண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு அகவிலைப்படி உயர்வினை அரசு ஊழியர்களுக்கு உடனே அறிவிக்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பு ஊதிய முறையை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமேளன பிரிவு கோட்ட செயலாளர் ரமேஷ், கணக்காயர் சங்க பொருளாளர் ரத்தினகுமார், வணிக ஆய்வாளர் சுமதி மற்றும் ஊழியர்கள், மின் வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.