பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சராசரி மதிப்பு ரூ. 6889 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

Update: 2021-07-16 13:50 GMT

ஏலத்திற்கு குவித்து வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள் 

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பருத்தி் ஏலம் நடந்தது. தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைகூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1941 லாட்டுகள் கொண்டுவரப்பெற்றது. மொத்த தாட்டுகளின் எண்ணிக்கை 4358 ஆகும். 1000 விவசாயிகள், 30510 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.  

சேலம், பண்ருட்டி, கடலூர், விழுப்புரம், செமினார்கோவில், கும்பகோணம் பகுதியை சேர்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். பருத்தியின் மதிப்பு சராசரியாக 2,10,00000/- ரூபாய் ஆகும். இதில்  வியாபாரிகளின் அதிகபட்ச விலையாக ரூ, 7332 ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 6109 ம்,  சராசரி மதிப்பு ரூ. 6889 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

Tags:    

Similar News