பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி இன்று ஏலம் நடைபெற்றது

Update: 2021-08-06 12:32 GMT

ஏலத்துக்கு வந்த பருத்தி மூட்டைகள்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடதிற்கு  பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து, 1000 விவசாயிகள், 3075 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.  தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைகூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

சேலம், பண்ருட்டி, கடலூர்,விழுப்புரம், செம்பொன்னார்கோவில், கும்பகோணம் பகுதிகளை சேர்ந்த 12 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர்.  

இதில்,  அதிகபட்ச விலையாக ரூ. 7789, குறைந்தபட்ச விலையாக ரூ. 7400,  சராசரி விலையாக 7650 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

பருத்தியின் மொத்த மதிப்பு சராசரியாக 2,3,50,000/- ரூபாய் ஆகும்.

Tags:    

Similar News