பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி் ஏல நிலவரம்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி் ஏலத்தில்,அதிகபட்ச விலை ரூ. 7169 என நிர்ணயிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி் ஏலம் நடைபெற்றது. தஞ்சாவூர் விற்பனைக்குழு, செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைகூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில், பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 50 விவசாயிகள், 104 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.
பண்ருட்டி, விழுப்புரம், செமினார்கோவில், கும்பகோணம், சார்ந்த 6 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ. 7,10,000 ஆகும். இதில் வியாபாரிகளின் அதிகபட்ச விலை ரூ. 7169, குவிண்டால் குறைந்தபட்ச விலை ரூ. 6579, குவிண்டால் சராசரி மதிப்பு ரூ. 6900 விலை நிர்ணயக்கப்பட்டது.