பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. அப்போது சில விவசாயிகளின் பருத்தி ஈரமாக இருந்ததால் வியபாரிகள் விலை நிர்ணயம் செய்யவில்லை. எனவே அனைத்து விவசாயிகள் போரட்டத்தில் ஈடுபட்டதால் எடை போடுவது நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சனிக்கிழமை காலை 10.00 மணியளவில், அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் ஈரபருத்தியின் விலை ரூ.5100 என நிர்ணயம் செய்யப்பட்டதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மொத்தம் 1666 லாட்டுகள் பருத்தி வரப்பெற்றது. அதில் அதிக பட்ச விலையாக ரூ.7179 எனவும், குறைந்த பட்ச விலையாக ரூ.5009 எனவும் சராசரி விலையாக ரூ.6600 என விலை நிர்ணயிக்கப்பட்டது. சராசரி மதிப்பு ரூ.1,86,00000 வழங்கப்பட்டுள்ளது.