பாபநாசம் பகுதியில் உர கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு
பாபநாசம் பகுதிகளில் உர கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
பாபநாசம் பகுதியில் உள்ள உர கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உரம், இருப்பு மற்றும் விலை நிலவரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் யூரியா,பொட்டாஷ், டி.ஏ.பி ஆகியவை இருப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது பாபநாசம் வேளாண்மை அலுவலர் ஜெகதீஸ்வர், பாபநாசம் சரக வருவாய் ஆய்வாளர் சரவணன், பாபநாசம் வர்த்தகர் சங்க தலைவர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.