அய்யம்பேட்டையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம்
அய்யம்பேட்டையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.;
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பொதுமக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அரசு வழக்கறிஞரும் பேரூர் தி.மு.க. செயலாளருமான துளசி ஐயா முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் சுற்று வட்டார ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.