கபிஸ்தலத்தில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்: போலீசார் அறிவுரை
கபிஸ்தலத்தில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.;
கபிஸ்தலத்தில் வணிகர் சங்கத்தினர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி கலந்துகொண்டு பேசுகையில் கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் குற்ற வழக்குகள் நடைபெறா வண்ணம் இருக்க வணிகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், இணைந்து கேமரா அமைத்தால் குற்ற வழக்குகள் நடைபெறாது.
அப்படி நடைபெற்றாலும் உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க ஏதுவாக இருக்கும். மேலும் ரகசிய கேமரா இருப்பது தெரிந்தால் குற்றங்கள் நடப்பது 90 சதவீதம் குறையும். எனவே அனைவரும் ஒத்துழைப்பு தந்து கபிஸ்தலம் காவல் சரகத்தில் உள்ள முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.