பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவனுக்கு பாராட்டு விழா

பாபநாசம் அருகே, தேசிய அளவில் பூப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கல்லூரி மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2021-12-13 01:00 GMT

பாபநாசம் பேரூராட்சி அரயபுரத்தை சேர்ந்தவர்  செல்வகுமரன், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி. இவருடைய மகன் சிவ பிரகதீஷ் (20). இவர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு பி.இ.படித்து வருகிறார். இவர் தேசிய அளவில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கப் பதக்கம், கோப்பை, நற்சான்றிதழ் பெற்றார்.

தேசிய அளவில் பூப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற கல்லூரி மாணவர் சிவ பிரகதீஷுக்கு பாராட்டு விழா பாபநாசம் லயன்ஸ் கிளப், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் இணைந்து நடத்தியது. சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆறுமுகம் தங்கப்பதக்கம் பெற்ற சிவ பிரகதீஷுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் செயலாளர் செந்தில், இயக்குனர்கள் பழனியப்பன், பாண்டியன், பன்னீர்செல்வம், சீனிவாசன், துணைத்தலைவர் ராஜாமுகமது, ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், வங்கி இயக்குனர்கள் மதியழகன், சேரலாதன், கிளை மேலாளர் அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News