அய்யம்பேட்டையிவ் தமுமுக மற்றும் மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனை
லக்கிம்பூர் சம்பவம் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்;
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாநில அணி நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, தமுமுகவின் பொதுச் செயலாளர் முனைவர் ஜெ. ஹாஜா கனி. மற்றும் தலைமை நிர்வாகிகள், தலைமை பிரதிநிதிகள், அணிகளின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,போதை பொருட்களை முற்றிலுமாக தடுக்க கடும் நடவடிக்கை தேவை. லக்கிம்பூர் சம்பவம் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளின் அமைதி பேரணியின் போது கொடூரமான முறையில், அவர்கள் மீது தனது வாகனத்தை ஏற்றி கொலை செய்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் வன்செயலையும் அவரைக் கைது செய்வதில் மிகச் சுணக்கமாக நடந்து கொண்ட யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி பாஜக அரசையும் வன்மையாகக் கண்டிப்பது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க உ.பி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி கொலை வழக்கில் உ.பி பாஜக அரசு அமைச்சர் மகனுக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதால் அவ்வழக்கை பாஜக ஆட்சி அல்லாத வேறு மாநிலங்களுக்கு மாற்ற உச்ச நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.