பாபநாசம் பேரூர் அமமுக பொருளாளர் திமுகவில் இணைந்தார்
கும்பகோணம் அருகே, பாபநாசம் பேரூர் அமமுக பொருளாளர் திமுகவில் இணைந்தார்.;
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் சுரேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில், திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் துணை தலைவருமான கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் துரைமுருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குமார், ஆகியோர் உடனிருந்தனர்.