பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.;
பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி வடக்கு தெருவில் வசித்து வந்தவர் பாலையன் (60) விவசாயி. சம்பவத்தன்று பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் ரோட்டை கடக்க முயன்ற போது, சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதி விட்டது.
இதில் பலத்த அடிபட்ட பாலையன், சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் இறந்தார். திருவையாற்றுக்குடி ரவிச்சந்திரன் (47) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், ஏட்டு குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.