சிலம்ப வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 % இடஒதுக்கீடு அரசாணை விரைவில் வெளியீடு

பள்ளிகளில் சிலம்பம் குறித்த பாடப்பிரிவுகளும், பல்கலைக்கழக அளவில் கொண்டு செல்லவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்;

Update: 2021-10-25 10:00 GMT

பாரம்பரிய விளையாட்டான சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என சுற்றுச்சூழல்- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன்  தெரிவித்தார்..

தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சுற்றுச்சூழல் இளைஞர்நலன் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தஞ்சை சமுத்திரம் ஏரிஅருகே உள்ள புதை சாக்கடை திட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு அதனை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அளித்த பேட்டி: எக்காரணம் கொண்டும் நேரடியாக ஆறுகளில் கழிவுநீர் கலக்கக் கூடாது , சுத்திகரிக்கப்பட்ட பின்னர்தான் ஆற்றில் விடவேண்டும் என அறிவுத்தியுள்ளோம், இன்னும் ஆறு மாத காலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் சுத்திகரிப்பு நிலையம் மேம்படுத்தப்படும்.  திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்ட நிலையில், வேலைவாய்ப்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணை இன்னும் ஒரு வார காலத்தில் வெளியிடப்படும்.  பள்ளிகளில் சிலம்பம் குறித்த பாடப்பிரிவுகளை சேர்க்கவும், பல்கலைக்கழக அளவில் சிலம்பத்தை கொண்டு செல்லவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சேர இதுவரை 50 ஆயிரம் தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். ஆர்வமுடையவர்கள் பதிவு செய்து இந்த இயக்கத்தில் சேர முன்வர வேண்டும் என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி. செய்தியாளர்களுக்கு   அளித்த பேட்டியில், வரும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும், கற்றலில் இடைவெளி ஏற்பட்ட காரணத்தினால், மாணவர்கள் ஒழுக்க நெறியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்க்காகதான் துவங்கப்படுகிறது, விருப்பமுடைய மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கற்றல் குறைபாட்டை சரிசெய்யும் விதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள "இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயிற்சி அளிக்க ஒரு லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை 50 ஆயிரம் தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர், மேலும் விருப்பமுடைய தன்னார்வலர்கள் முன்வந்து பதிவு செய்து கொள்ளலாம். நவ. 1 -ஆம் தேதி முதல் இத்திட்டம் துவங்கப்படவுள்ளது என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


Tags:    

Similar News