தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் பலி

Update: 2021-03-03 12:30 GMT

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பாபநாசம் இடையே வலங்கைமான் தாலுகா குமாரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் மனோ. இவர் நேற்றிரவு உறவினர் வீட்டிற்கு சென்றபோது பாபநாசம் சுந்தரப்பெருமாள் கோவில் இடையே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்ற போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே மனோ உயிரிழந்தார்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இன்று காலை ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News