ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்: வைரலாகும் சிசிடிவி காட்சிகள் - 14 பேர் மீது போலீசார் விசாரணை

முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருடைய ஆதரவாளர்கள், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வீட்டிற்கு தாக்க சென்ற சிசிடிவி காட்சி சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2021-06-11 11:15 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தற்போதைய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி. இவர்களது குடும்பத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சாமியய்யா குடும்பத்திற்கும், நீண்ட நாட்களாக இடப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இடப்பிரச்சினை சம்பந்தமாக இரு தரப்புக்கும் இடையே அடிதடி வெட்டு குத்து நடந்துள்ளது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியா தரப்பிலும், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தரப்பிலும் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 14 மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக ஆயங்குடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சாமியய்யா ஆதரவாளர் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் தற்போது ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தரப்பிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவர் மகன் மாதரசன், விஜயழன் , சதீஷ்குமார், பிரசன்னா, இளங்கோவன், புண்ணியமூர்த்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போதைய அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர் சுபாஷ் சந்திர போஸ் கொடுத்த புகாரில், முன்னாள் ஊராட்சி திமுக மன்ற தலைவர் மகன் பன்னீர்செல்வம், இளையராஜா, முகேஷ், தினேஷ், மணிபாரதி, விக்னேஷ், வெற்றி செல்வம் ஆகியோர் மீது ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஒரே கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் அடித்துக்கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News