48மணி நேரத்தில் திருடனை கைது செய்து அசத்திய தனிப்படை போலீசார்

ஒரத்தநாடு அருகே 16 பவுன் நகை, 20 ஆயிரம் பணத்தை திருடி சென்ற நபரை 48மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-07-17 13:45 GMT

மாதிரி படம் 

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயம். இவர் வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். திரும்பி வந்து வீட்டை பார்க்கும் போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 16 நகையும், 20 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, பாப்பாநாடு காவல் நிலையத்தில் ஜெயம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில், ஒரத்தநாடு தனிப்படை உதவி ஆய்வாளர் பிரேசில் பிரேம் ஆனந்த் தலைமையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் பெயரில் அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகன் கோவிந்தராஜ் 28 என்பவரை பிடித்து விசாரணை செயதனர். பிறகு கேவிந்தராஜ் தலைமறைவாகியுள்ளார்.

மேலும், செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளும்போது செல் நம்பர் சுவிட்ச் ஆப்பில் இருந்து உள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நெட்வொர்க் மூலம் கோபிதரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, வேளாங்கண்ணி நோக்கி செல்கின்றனர். அங்கு கடல் கரையில் முன்னாள் சிறைவாசி நண்பர்களான திருவாரூரைச் சேர்ந்த சதீஷ்குமார், விக்னேஷ் ஆகியோருடன் இருந்துள்ளார். உடனடியாக  போலீசார் சுற்றி வளைத்து மூவரையும் கைது செய்து, ஒரத்தநாடு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவரிடம் இருந்த நகைகளை மீட்டு செலவு செய்த பணத்தை வாங்கி உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

Tags:    

Similar News