திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் நுரையீறல் தொற்றால் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம் திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நுரையீறல் தொற்றால் உயிரிழந்தார்.;
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே அத்திவெட்டி சேர்ந்தவர் உதவி ஆய்வாளர் வைத்தியலிங்கம். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியாற்றி வருகிறார் .
கடந்த மே 22ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மேலும் இவருக்கு கடந்த பத்து வருடங்கள் முன்பு இதய நோய் பிரச்சினை இருந்தது வந்து உள்ளது . இதற்கு சிகிச்சையும் பெற்ற வந்து உள்ளார்.உதவி ஆய்வாளர் வைத்திலிங்கம் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் போட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.