தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டை, குத்தான்செரி ஆகிய இரு கிராமங்களிலும் சேர்த்து 50 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனை அடுத்து நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வெளி ஆட்கள் உள்ளே வராதவாறும், அப்பகுதி மக்கள் வெளியே செல்லாதவாறு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
மேலும் அருகிலுள்ள கூத்தாஞ்செரி கிராமத்தையும் அடைத்து வைத்துள்ளனர். மேலும் தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மற்றும் தூய்மை செய்யக்கூடிய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பரிசோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அவர்களுக்கு தேவையான காய்கறி மளிகை பொருட்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.