தஞ்சை மாவட்டத்தில் 56 நாட்களுக்கு பிறகு 161 மதுகடைகள் திறப்பு

தஞ்சை மாவட்டத்தில் 56 நாட்களுக்குப் பிறகு 161 டாஸ்மார்க் கடைகள் திறப்பு. மதுபானங்களை வாங்க ஆர்வம் காட்டாத மதுப்ரியர்கள்.

Update: 2021-07-05 05:15 GMT

கொரோனா தொற்றால், கடந்த மே 10ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தஞ்சை, கோவை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் அல்லாத, 27 மாவட்டங்களில் இரண்டு வாரங்களுக்கு முன்பு டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது. மது குடிப்போர் தஞ்சை மாவட்டத்தில் இருந்து அருகில் உள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டத்தில் சென்று மதுபானங்களை வாங்கி அருந்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு இன்று முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. இதன்படி தஞ்சை மாவட்டத்திலுள்ள 161 டாஸ்மாக் கடைகளும், 56 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட போதும் பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக மதுக் கடைக்கு வரும்போது முக கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டும் சமூக வழியை கடைபிடித்த ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News