தஞ்சையில் அக்காவை கொலை செய்ய முயற்சி செய்த தம்பி கைது
தஞ்சையில் அக்காவின் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவர் அதே பகுதி வடக்கு தெருவை சேர்ந்த ஒருவரை இளஞரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் கலைவாணியின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை,
இந்நிலையில் இந்த காதலை விடுமாறு குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் கலைவாணி அதை கேட்காமல் மீண்டும் அந்த இளைஞர் உடன் காதலை தொடர்ந்துள்ளார்.
இதனால் இந்த பிரச்சினை தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த காதலனின் பெயரை பச்சை குத்தி இருப்பதையும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இதனால் இன்று காலை கலைவாணி அவரது பெற்றோர்கள் மற்றும் தம்பி சுதனுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி சுதன் வீட்டில் இருந்த குழவிக் கல்லை கலைவாணியின் தலையில் போட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கலைவாணி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து தஞ்சை தெற்கு காவல் துறையினர் சுதனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.