ஒரத்தநாடு அருகே பேருந்து நிறுத்தத்தில் கிடந்த ஆண் குழந்தை மீட்பு

காவல்துறை அளித்த தகவலையடுத்து சைல்டுலைன் அமைப்பினர் அந்தக் குழந்தையை மீட்டு ராசாமிராசுதார் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்;

Update: 2021-10-01 16:45 GMT

 ஒரத்தநாடு - வல்லம் சாலையில் உள்ள வார கோட்டை கிராம பேருந்து நிறுத்தம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற  பிறந்தது 5 நாட்களே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், ஏழுப்பட்டி அருகே ஒரத்தநாடு - வல்லம் சாலையில் உள்ள வாரகோட்டை கிராம  பேருந்து நிறுத்தப் பகுதியில்,  பச்சிளம் குழந்தையின் அழுகை சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து,  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தில்  வந்து பார்த்த போது, அங்கு பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை யாரும்  கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், குழந்தையின் பெற்றோர்கள் யாரும் அக்கம் பக்கத்தில் உள்ளனரா என்று தேடி பார்த்த போது யாரையும் காணவில்லை.

இது குறித்து வல்லம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.   அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர், சைல்டுலைன் 1098க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.  இதனையடுத்துசைல்டுலைன் அமைப்பினர் குழந்தையை மீட்டு, ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.  அங்கு  குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.   இந்த குழந்தை யாருடையது, குழந்தை ஏன் இங்கு வந்து  போட்டு விட்டு சென்றார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News