திருமாவளவன் படத்திற்கு சாணம் பூசிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் படத்திற்கு சாணம் பூசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-07-21 02:15 GMT

சாணம் பூசப்பட்ட திருமாவளவன் சுவர் ஓவியம்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்திக் கோட்டை அருகேயுள்ள, குறிச்சி பகுதியில்  விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் உருவப்படம் சுவரில் வரையப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு, திருமாவளவனின் படத்தில் யாரோ மர்ம நபர்கள் சாணத்தை அள்ளி பூசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து கட்சியினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர்  ஒரத்தநாடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுனில் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசாருடன் விரைந்து சென்ற அவர் விசாரணை செய்து வருகிறார்.  ஆனால் யார் என்பது சரியாக தெரியாததால் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம்படுத்தி, விரைவில் குற்றவாளி யாரென்று கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தார்.

அதன்பின் அங்கு சென்ற கட்சியினர் கலைந்து சென்றனர். இதுகுறித்து இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் இனியவளவன்,  கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமாவளவன் படத்திற்கு சாணம் பூசிய நபரை தேடி வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்கு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

Tags:    

Similar News