பாலம் இல்லாததால் தண்ணீரில் இறங்கி சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்லும் அவலம்

இது குறித்து பல்வேறு புகார் மனுக்கள் அளித்தும், நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எவ்வித எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது

Update: 2021-10-13 15:45 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மயானத்துக்கு செல்ல பாலம் இல்லாததால் தண்ணீரில் சடலத்தை கொண்டு செல்லும் கிராம மக்கள்

பாலம் இல்லாததால், பாப்பான் ஓடையில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி இறந்தவரின் உடலை மயானத்துக்கு  எடுத்துச் சென்று பொதுமக்கள் அடக்கம் செய்த

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் பகுதியில் பாப்பான் ஓடை உள்ளது. இந்த ஓடையை கடந்து செல்ல சிறிய பாலம் கூட இல்லை.இதனால் அந்த பகுதியில் இறந்தவர்களை மயானத்துக்கு  எடுத்துச் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பல்வேறு புகார் மனுக்கள் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஒக்கநாடு மேலையூர் யாதவர் தெருவை சேர்ந்த சுந்தரம்மாள் என்ற மூதாட்டி இன்று உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய இடுப்பளவு தண்ணீரில் இறங்கி கடந்து சென்று மயானத்தில் ல் உடலை தகனம் செய்தனர்.எனவே  மயானத்துக்கு  செல்ல உரிய பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News