இயற்கை ஒருபுறம்,அதிகாரிகள் மறுபுறம் என விவசாயிகள் அலைக்கழிப்பு:சிபிஎம் கருத்து

நெல் மணிகள் மழையில் நனைந்து வருவதற்கு விவசாயிகள் பொறுப்பேற்க முடியாது.;

Update: 2021-10-20 08:45 GMT

 பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது.

இயற்கை ஒருபுறம், அதிகாரிகள் மறுபுறம் என விவசாயிகளை அலைக்கழிக்கப்பதாகவும், ஈரப்பதத்தை காரணம் காட்டாமல் அனைத்து நெல்களையும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூரில் கண்ணன் ஆறு காட்டாறு நீரை பம்பிங் செய்து மேட்டுப் பகுதி பாசனம் செய்ய இழுவை பாசன நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தற்போது இழுவை பாசன நீரேற்று நிலையம் பழுதடைந்துஉள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டெல்டா மாவட்டங்களில் நெல் மணிகள் மழையில் நனைந்து வருவதற்கு விவசாயிகள் பொறுப்பேற்க முடியாது. இயற்கை ஒருபுறம், அதிகாரிகள் மறுபுறம் விவசாயிகளை அலைகழிக்கிறார்கள். ஈரப்பதத்தை காரணம் சொல்லாமல் அனைத்து நெல்லையும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.



Tags:    

Similar News