அரசு விரைவாக நெல் கொள்முதல் செய்யவேண்டும்: அய்யாக்கண்ணு பேட்டி

விரைவாக நெல்லை கொள்முதல் செய்யவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்றார் அய்யாக்கண்ணு;

Update: 2021-10-10 17:00 GMT

தமிழக அரசு விரைவாக நெல்லை கொள்முதல் செய்யவில்லை, என்றால் விவசாயிகள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புசங்க தலைவர் அய்யாக்கண்ணு தஞ்சையில் பேட்டி.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின், கிளை அலுவலகத்தை அதன் தலைவர் அய்யாக்கண்ணு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரத்தநாடு முதல் புதூர் வரை சாலையோரங்களில் நெல் மணிகள் மலை போல் குவியல் குவியலாக உள்ளதாகவும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நெற்குவியல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த அவர், தொடர் மழையில் நெல்மணிகள் முளைத்து வருவதாகவும், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து நாளொன்றுக்கு 5 ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டும். கால தாமதம் ஆனால் விவசாயிகள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என வேதனை தெரிவித்தார். குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் கொள்முதல் விலை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

Tags:    

Similar News