ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2021-06-26 05:50 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விற்க ஏதுவாக மாவட்டத்தில் 193 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்களில் , செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சடையார் கோயில், வாண்டையார் இருப்ப ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் கொள்முதல் நிலையங்களில் ஐந்து நாட்களுக்கு மேலாக நெல்லுடன் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் ஒரு நாளைக்கு வெறும் 400 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். காலதாமதம் ஏற்படுவதால், தினமும் கூடுதலாக ஒரு நாளைக்கு 1,000 வரை செலவு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக அதாவது ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News