வருகிற 20 ம் தேதி கருப்பு கொடி போராட்டம்: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க கூட்டு இயக்கம்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கண்டித்து வரும் 20ஆம் தேதி திருச்சியில் கருப்புக்கொடி பேரணி நடைபெறும் என அறிவிப்பு;

Update: 2021-07-14 16:30 GMT

தஞ்சையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க கலந்தாய்வு கூட்டம் அதன் மாநிலச் செயலாளர் தனபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்தும், அதற்கான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை கேட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி வரும் 20ம் தேதி திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு விவசாயிகள் பேரணியாக வந்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்குப் பிறகும் மத்திய அரசு, கர்நாடக அரசை கண்டிக்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை அணுகி, மேகதாது அணைக்கு எதிராக தடையாணை வாங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News