சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி குறைந்தபட்சம் 175 தொகுதிகளில் வெற்றி பெறும் என வைத்தியலிங்கம் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக வந்து ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேலிடம் வேட்புமனுவை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக தேர்தல் அறிக்கையில் 6 சிலிண்டர் வழங்கப்படும் என்பது பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், கூட்டணி கட்சிகளுடன் மற்றும் தனியாகவும் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்த அவர், அதிமுக கூட்டணி குறைந்தபட்சம் 175 தொகுதிகளில் வெற்றிபெறும் என அவர் தெரிவித்தார்.