இளம் பெண் மரணம் - உறவினர்கள் சாலை மறியல்

அரசு மருத்துவமனையின் முன்பு ஊர் பொதுமக்கள், திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், இரண்டு மணி நேரம் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

Update: 2021-07-01 15:00 GMT

ஒரத்தநாடு அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் போஸ்ட் மாடம் செய்வதில் தாமதமானதால், அரசு மருத்துவமனையின் முன்பு ஊர் பொதுமக்கள், திடீர் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டதால், இரண்டு மணி நேரம் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(38) வழக்கறிஞர். இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை தாலுக்கா, உக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (31). என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் விரக்தியடைந்த ஜெயலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். ஒரத்தநாடு டிஎஸ்பி சுனில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் ஜெயலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆர்டிஓ வேலுமணி பணியின் நிமிர்த்தம் காரணமாக வருவதில் தாமதம் ஏற்பட்டதால் விசாரணை தாமதமானது. இதனால் ஜெயலட்சுமி பிரேதத்தை மாலை 6 மணி வரை போஸ்ட்மாடம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் ஊர் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இத்தகவலை அறிந்த ஆர்டிஓ ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் உள்ள ஜெயலட்சுமி பிரேதத்தை போஸ்ட்மார்டம் செய்து உறவினரிடம் ஒப்படைத்தனர். இதனால் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு முன்பு பதட்டமான சூழ்நிலை உருவானது. இதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.




 


Tags:    

Similar News