சாலை ஆக்கிரமிப்பை மீட்டுத்தரக் கோரி மனு

Update: 2021-06-24 11:00 GMT

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே மேல உளூர் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் சாலையின் ஆக்கிரமிப்பை மீட்டுத்தரக் கோரி, மாவட்ட செயலாளர் தங்க.முருகன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் ஒரத்தநாடு தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள மேல உளூர் கிராமத்தில் சுமார் 500 மேற்பட்ட  தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அதே ஊரை சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீசன், அவரது மகன்களான ஜெயப்பிரகாஷ், பழனிநாதன் ஆகியோர் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் விவசாய இடத்திற்கு பயன்படுத்திய பழஞ்சாலை என்ற சாலையை ஆக்கிரமிப்பு செய்து, அப்பகுதி மக்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருவதால், பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில்  தஞ்சை தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர், தங்க.முருகானந்தம் தலைமையில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரத்தநாடு வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் விவசாயிகளை திரட்டி, வட்டாட்சியர் அலுவலகங்களில் உண்ணாவிரதம் இருப்போம் என எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News