கும்பகோணத்தில் மஞ்சப்பை இயக்கம் தொடக்கம்
கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் 100 % பிளாஸ்டிக் பைகளைக் கைவிட வணிகா்களிடம் வலியுறுத்தப்பட்டது;
மஞ்சப்பை இயக்கத்தைத் தமிழக முதல்வா் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் நூறு சதவீதம் பிளாஸ்டிக் பைகளைக் கைவிட வணிகா்களிடம் வலியுறுத்தும் விதமாக விழிப்புணா்வுக் கூட்டம் மற்றும் மஞ்சப் பை இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தை மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன் தொடக்கி வைத்தாா். நகா் நல அலுவலா் பிரேமா, மஞ்சப் பை இயக்கத்தின் நோக்கம் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினாா். இக்கூட்டத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்புச் செயலா் சத்தியநாராயணன், துணைத் தலைவா் ரமேஷ்ரோஜா, துணைச் செயலா் வேதம்முரளி, ஹோட்டல் சங்கச் செயலா் வாசன் வெங்கட்ராமன், ஜவுளி வியாபாரிகள் சங்கத் துணைச் செயலா் நாகராஜன், ஆட்டோ பாா்ட்ஸ் டீலா்கள் சங்கப் பொருளாளா் ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.