கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் உலக மகளிர் தின நிகழ்ச்சி
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு குழு மற்றும் கும்பகோணம் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக, உலக மகளிர் தினம் 2022 நடைபெற்றது. விழாவிற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண்களின் பல்வேறு பரிமாணங்கள் சாதனைகள், இன்றைய பெண்கள் பல்வேறு துறைகளில் தலைமைப்பண்பு மற்றும் முக்கிய பொறுப்புகளையும் வகித்து வருவதைக் குறிப்பிட்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் தலைவர் செந்தில்குமார், கல்லூரியின் ஆலோசகர் கோதண்டபாணி, டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர். பாலமுருகன் தலைமை உரையாற்றினார். மகளிர் மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலைமணி சண்முகம் வரவேற்றார். கல்விப்புல தலைவர் முனைவர் ருக்மாங்கதன், அரசு சமூக வானொலி 90.4 ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் சாந்தா ஷீலா நன்றி கூறினார்.