திமுகவில் ஐக்கியமான விஜயகாந்த் மன்ற தஞ்சை மாவட்ட செயலாளர்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மன்ற தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் திமுகவில் ஐக்கியம்;
கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூரை சேர்ந்தவர் ராஜா. இவர் தஞ்சை வடக்கு மாவட்ட நடிகர் விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளராக கடந்த பல ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் முன்னிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் அப்பதவியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருடன் பல்வேறு கட்சியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் உள்ளூர் கணேசன், பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ரவி, மாவட்ட பிரதிநிதி கரிகாலன், நிர்வாகி ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.