சுவாமிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற்றது;

Update: 2022-06-12 14:45 GMT

கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


இதனைத் தொடர்ந்து முதல் முறையாக சங்காபிஷேகம் நடைபெற்றது. மேலும் மாலை 6 மணி அளவில் முருகன் வள்ளி தெய்வானை வீதி உலா நடைபெற்றது.

சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு போதுமானஅடிப்படை வசதிகளை சுவாமிமலை பேரூராட்சி மன்றத் தலைவர் வைஜெயந்தி சிவகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, பேரூராட்சி துணை தலைவர் சங்கர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News